டென்னிஸ்

மாண்டே கார்லோ மாஸ்டர்ஸ்: காலிறுதியில் நடப்பு சாம்பியன் அதிர்ச்சி தோல்வி

Published On 2025-04-12 00:23 IST   |   Update On 2025-04-12 00:23:00 IST
  • மாண்டே கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடைபெறுகிறது.
  • ஒற்றையர் பிரிவில் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் காலிறுதியில் தோல்வி அடைந்தார்.

மாண்டே கார்லோ:

மாண்டே கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடைபெறுகிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதியில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், இத்தாலியின் லாரன்சோ முசெட்டி உடன் மோதினார்.

இதில் 6-1 என முதல் செட்டை சிட்சிபாஸ் கைப்பற்றினார். இதில் சுதாரித்துக் கொண்ட லாரன்சோ முசெட்டி அடுத்த இரு செட்களை

6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

இதன்மூலம் நடப்பு சாம்பியனான சிட்சிபாஸ் காலிறுதி சுற்றுடன் தொடரில் இருந்து வெளியேறினார்.

Tags:    

Similar News