டென்னிஸ்

விம்பிள்டன் டென்னிஸ்: தகுதிச்சுற்றில் சுமித் நாகல் தோல்வி

Published On 2025-06-24 14:35 IST   |   Update On 2025-06-24 14:35:00 IST
  • விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
  • தகுதிச்சுற்றில் இந்திய வீரர் சுமித் நாகல் தோல்வி அடைந்தார்.

லண்டன்:

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் மிக உயரியதான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் வரும் 30-ம் தேதி தொடங்கி, ஜூலை 13-ம் தேதி வரை லண்டனில் நடக்கிறது. இந்தப் போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.620 கோடியாகும். இது சென்ற ஆண்டை விட 7 சதவீதம் அதிகம். ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்லும் வீரர், வீராங்கனைகள் தலா ரூ.34 கோடியை பரிசுத்தொகையாக பெறுவார்கள்.

இந்நிலையில், விம்பிள்டன் தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.

இதில் இந்தியாவின் சுமித் நாகல், இத்தாலியின் ஜிபேரி உடன் மோதினார்.

இதில் முதல் செட்டை ஜிபேரி 6-2 என கைப்பற்றினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சுமித் நாகல் 2வது செட்டை 6-4 என வென்றார்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை இத்தாலி வீரர் 6-2 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

Tags:    

Similar News