டென்னிஸ்
Sabalenka | இந்தியன் வெல்ஸ் ஓபன்: சாம்பியன் பட்டம் வென்றார் சபலென்கா
- இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
- பெலாரஸ் வீராங்கனை சபலென்கா இறுதிச்சுற்றில் வெற்றி பெற்றார்.
வாஷிங்டன்:
இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் பெலாரசின் அரினா சபலென்கா, கஜகஸ்தானின் எலினா ரிபாகினா உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய ரிபாகினா முதல் செட்டை 6-3 என கைப்பற்றினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆடிய சபலென்கா அடுத்த இரு செட்களை 6-3, 7-6 (8-6) என வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.