Indian Wells | அல்காரஸ்க்கு அதிர்ச்சி அளித்த மெட்வெதேவ்- பைனலில் சின்னருடன் பலப்பரீட்சை
- மெட்வெதேவ் முதல் செட்டை 6-3 என எளிதாக கைப்பற்றினார்.
- 2-வது செட் டை-பிரேக் வரை சென்ற நிலையில், அல்காரஸை வீழ்த்தினார்.
இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்திய நேரப்படி இன்று காலை ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.
முதல் அரையிறுதியில் 2-ம் நிலை வீரரான சின்னர், 4-ம் நிலை வீரரான ஸ்வெரேவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
2-வது அரையிறுதி போட்டியில் முதல் நிலை வீரரான அல்காரஸ்- 11-ம் நிலை வீரரான மெட்வெதேவை எதிர்கொண்டார். இதில் அல்காரஸ் எளிதாக வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் மெட்வெதேவ் முதல் செட்டை 6-3 என எளிதாக கைப்பற்றினார். 2-வது செட்டில் அல்காரஸ் கடும் சவால் விடுத்தார். இருந்தாலும் மெட்வெதேவ் ஈடுகொடுத்து விளையாடினார். இதனால் 2-வது செட் டை-பிரேக் வரை சென்றது. இறுதியில் மெட்வெதேவ் 2-வது செட்டை 7(7)-6(3) என கைப்பற்றினார்.
இதன்மூலம் 6-3, 7(7)-6(3) என நேர்செட் கணக்கில் மெட்வெதேவ் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் மெட்வெதேவ்- சின்னர் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.