டென்னிஸ்
விம்பிள்டன் டென்னிஸ்: நம்பர் 1 வீராங்கனை அரையிறுதிக்கு முன்னேற்றம்
- விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
- காலிறுதி சுற்றில் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா அபார வெற்றி பெற்றார்.
லண்டன்:
கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் விளையாடி வருகின்றனர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் கஜகஸ்தானின் அரினா சபலென்கா, ஜெர்மனியின் லாரா சிக்மெண்ட் உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 4-6 என இழந்த சபலென்கா அடுத்த இரு செட்களை 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.