டென்னிஸ்
பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: அலெக்ஸ் டி மினார் 3-வது சுற்றுக்கு தகுதி
- ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் அலெக்ஸ் டி மினார் (ஆஸ்திரேலியா) - கேப்ரியல் டியாலோ (கனடா) மோதினர்.
- டி மினார் 3-வது சுற்றில் கச்சனோவ் உடன் மோத உள்ளார்.
பாரீஸ்:
பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் அலெக்ஸ் டி மினார் (ஆஸ்திரேலியா) - கேப்ரியல் டியாலோ (கனடா) மோதினர்.
இதில் தொடக்கம் முதலே இருவரும் சம பலத்துடன் மல்லுக்கட்டியதால் ஆட்டத்தில் அனல் பறந்தது. முதல் செட்டை டி மினார் போராடி கைப்பற்றிய நிலையில், 2-வது செட்டை டியாலோ கைப்பற்றினார்.
இதனையடுத்து நடைபெற்ற 3-வது செட்டை டி மினார் கைப்பற்றி பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இந்த ஆட்டத்தில் டி மினார் 7-6, 4-6 மற்றும் 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.
இவர் 3-வது சுற்றில் கச்சனோவ் உடன் மோத உள்ளார்.