டென்னிஸ்
சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ஜெசிகா பெகுலா
- சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
- இதன் அரையிறுதியில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா வெற்றி பெற்றார்.
வாஷிங்டன்:
சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் அரையிறுதிச் சுற்றில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, ரஷியாவின் அலெக்சாண்ட்ரோவா உடன் மோதினார்.
இதில் ஜெசிகா 6-2 என முதல் செட்டை வென்றார். 2வது செட்டை அலெக்சாண்ட்ரோவா 6-2 என கைப்பற்றினார்.
இதையடுத்து, வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை 7-5 என ஜெசிகா பெகுலா வென்றதுடன், இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தினார்.