டென்னிஸ்

விம்பிள்டன் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறினார் இகா ஸ்வியாடெக்

Published On 2025-07-09 19:47 IST   |   Update On 2025-07-09 19:47:00 IST
  • விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
  • காலிறுதியில் போலந்தின் ஸ்வியாடெக் வெற்றி பெற்றார்.

லண்டன்:

கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் விளையாடி வருகின்றனர்.

பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் 8-வது வரிசையில் உள்ள போலந்தின் இகா ஸ்வியாடெக், 19-வது வரிசையில் உள்ள ரஷியாவின் சம்சனோவா உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய இகா ஸ்வியாடெக் 6-2, 7-5 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

Tags:    

Similar News