பிரிஸ்பேன் ஓபன்: சபலென்கா சாம்பியன் பட்டம் வென்றார்
- சபலென்கா 62 பாயிண்ட்கள் வென்ற நிலையில், கோஸ்ட்யூக் 47 புள்ளிகள் வென்றிருந்தார்.
- சபலென்கா 3/8 பிரேக் பாயிண்ட், கோஸ்ட்யூக் 1/3 பிரேக் பாயிண்ட் பெற்றனர்.
ஆஸ்திரேலிய கிராண்ட்ஸ்லாம் தொடருக்கு முன்னோட்டமாக கருதப்படும் பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் தொடர் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் நம்பர் ஒன் வீராங்கனையான பெலாரஸின் அரீனா சபலென்காவும், 16-ம் நிலை வீராங்கனையான உக்ரைனின் மர்தா கோஸ்ட்யூக்கும் பலப்பரீட்சை நடத்தினார். இதில் சபலென்கா 6-4, 6-3 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
அரையிறுதியில் கோஸ்ட்யூக் அமெரிக்காவின் பெகுலாவை 6-0, 6-3 என வீழ்த்தியிருந்தார். சபலென்கா ரஷியாவின் செக்குடியரசின் முச்சோவாவை 6-3, 6-4 என வீழ்த்தியிருந்தார்.
சபலென்கா முதல் சர்வீஸ் மூலம் 80 சதவீதம் வெற்றியை பெற்றார். கோஸ்ட்யூக் 57 சதவீதம் வெற்றிகளை பெற்றார். சபலென்கா 3/8 பிரேக் பாயிண்ட், கோஸ்ட்யூக் 1/3 பிரேக் பாயிண்ட் பெற்றனர்.
சபலென்கா 62 பாயிண்ட்கள் வென்ற நிலையில், கோஸ்ட்யூக் 47 புள்ளிகள் வென்றிருந்தார்.