டென்னிஸ்
ஆஸ்திரேலிய ஓபன் : கலப்பு இரட்டையர் காலிறுதியில் போபண்ணா ஜோடி தோல்வி
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
- கலப்பு இரட்டையர் பிரிவில் போபண்ணா ஜோடி அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதி சுற்று போட்டிகள் மெல்போர்னில் நடந்து வருகின்றன.
இதில் ஆண்கள் கலப்பு இரட்டையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-சீனாவின் ஷுவாய் ஜாங் ஜோடி, ஆஸ்திரேலியாவின் ஜான் பியர்ஸ்-ஒலிவியா ஜோடியுடன் மோதியது.
இதில் போபண்ணா ஜோடி முதல் செட்டை 6-2 என வென்றது. ஆனால் அடுத்த இரு செட்களை 4-6, 9-11 என இழந்து தோல்வி அடைந்து, தொடரில் இருந்து வெளியேறியது.