ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: அதிகரிக்கப்பட்ட பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் வரும் 12-ம் தேதி தொடங்குகிறது.
- இந்தத் தொடரில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்பார்கள்.
சிட்னி:
கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்று ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ். இந்த டென்னிஸ் தொடரானது ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவிலுள்ள மெல்போர்ன் நகரில் நடத்தப்பட்டு வருகிறது.
இந்தத் தொடரில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்பார்கள் என்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிக்கும்.
நடப்பு ஆண்டிற்கான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் வரும் 12-ம் தேதி தொடங்குகிறது. இறுதிப் போட்டி பிப்ரவரி 1-ம் தேதி நடைபெறுகிறது.
கடும் சவால் அளிக்கும் இந்தத் தொடரில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் யார் சாம்பியன் பட்டத்தை வெல்லுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், ஆஸ்திரேலிய ஓபன் தொடருக்கான பரிசுத்தொகையானது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நடப்பு ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஒட்டுமொத்த பரிசுத்தொகை 111.5 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் சுமார் ரூ.675 கோடியாகும்.
இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 16 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நடந்த ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் ஒட்டுமொத்த பரிசுத்தொகை 96.15 மில்லயன் ஆஸ்திரேலிய டாலராக இருந்தது.