டென்னிஸ்

துபாயில் இன்று கண்காட்சி போட்டி: ஆஸ்திரேலிய வீரருடன் மோதும் நம்பர் 1 வீராங்கனை

Published On 2025-12-28 00:53 IST   |   Update On 2025-12-28 00:53:00 IST
  • துபாயில் இன்று கண்காட்சி போட்டி நடைபெற உள்ளது.
  • இதில் அரினா சபலென்கா, ஆஸ்திரேலியாவின் நிக் கிர்கியோசுடன் மோதுகிறார்.

துபாய்:

அடுத்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடர் அடுத்த மாதம் 12-ம் தேதி முதல் பிப்ரவரி 1-ம் தேதி வரை மெல்போர்னில் நடைபெற உள்ளது.

இந்தத் தொடருக்காக நம்பர் 1 வீராங்கனையான பெரலாசைச் சேர்ந்த அரினா சபலென்கா தயாராகி வருகிறார். கடந்த 2023, 24-ம் ஆண்டுகளில் ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்ற அவர், 2025 இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் மேடிசன் கீசிடம் தோல்வி அடைந்தார்.

மூன்றாவது முறையாக பட்டம் வெல்லும் இலக்குடன் அவர் ஆஸ்திரேலியா புறப்படுகிறார்.

இதற்கிடையே, துபாயில் இன்று நடைபெறும் கண்காட்சி போட்டியில் பெலாரசின் அரினா சபலென்கா, ஆஸ்திரேலிய வீரர் நிக் கிர்கியோசுடன் மோதுகிறார்.

துபாயில் உள்ள கோகோ-கோலா அரீனா அரங்கில் இந்திய நேரப்படி இன்று இரவு 9.15 மணிக்கு போட்டி தொடங்கி நடைபெற உள்ளது.

Tags:    

Similar News