விளையாட்டு

கிரிக்கெட் வாரியத்தின் புதிய தேர்வுக்குழு உறுப்பினர்களாக ஆர்.பி.சிங், ஓஜா நியமனம்

Published On 2025-09-17 12:47 IST   |   Update On 2025-09-17 12:47:00 IST
  • தேர்வு குழுவுக்கு முன்னாள் வேகப்பந்து வீரர் அஜித் அகர்கர் தலைவராக உள்ளார்.
  • எஸ்.சரத், சுபர்கோ பானர்ஜி ஆகியோரின் பதவி காலம் முடிவடைகிறது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி. சி.ஐ) தேர்வு குழுவுக்கு முன்னாள் வேகப்பந்து வீரர் அஜித் அகர்கர் தலைவராக உள்ளார். சுபர்கோ, பானர்ஜி, அஜய் ரத்ரா, எஸ்.சரத் ஆகிய 4 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

இதில் எஸ்.சரத், சுபர்கோ பானர்ஜி ஆகியோரின் பதவி காலம் முடிவடைகிறது. இதனால் தேர்வு குழுவில் இருந்து அவர்கள் வெளியேறுவார்கள். அவர்களுக்கு பதிலாக புதிய தேர்வுக்குழு உறுப்பினராக முன்னாள் பந்து வீச்சாளர் ஆர்.பி.சிங், பிரக்யான் ஓஜா நியமிக்கப்படுகிறார்கள்.

கிரிக்கெட் வாரியத்தின் வருடாந்திர பொதுக்குழு கூட்டம் வருகிற 22-ந்தேதி நடக்கும் இந்த கூட்டத்தில் ஆர்.பி.சிங், ஓஜா ஆகியோர் பெயர்கள் தேர்வுக்குழு உறுப்பினராக அறிவிக்கப்படும்.

இடது கை வேகப்பந்து வீரரான ஆர்.பி.சிங் 2007 -ம் ஆண்டு டோனி தலைமையில் 20 ஓவர் உலக கோப்பையை வென்ற அணியில் இடம்பெற்று இருந்தார். 39 வயதான அவர் 82 சர்வதேச போட்டிகளில் 124 விக்கெட் கைப்பற்றியுள்ளார். மத்திய மண்டலத்தில் இருந்து அவர் தேர்வுக்குழு உறுப்பினர் ஆகிறார்.

இடது கை சுழற்பந்து வீரரான ஓஜா தெற்கு மண்டலத்தில் இருந்து தேர்வுக்குழு உறுப்பினரா கிறார். அவர் 24 டெஸ்டில் 113 விக்கெட் கைப்பற்றியுள் ளார். ஒருநாள் போட்டியில் 21 விக்கெட்டும் (18 போட்டி), 20 ஓவர் ஆட்டத்தில் 10 விக்கெட்டும் (6 போட்டி) எடுத்தவர்.

Tags:    

Similar News