விளையாட்டு

மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: தகுதி சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் வெற்றி

Published On 2025-05-20 14:53 IST   |   Update On 2025-05-20 14:53:00 IST
  • ஆண்களுக்கான தகுதி சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் வெற்றி பெற்றார்.
  • பெண்களுக்கான தகுதிச்சுற்றில் இந்தியாவின் அன்மோல் கார்ப் தோல்வியடைந்தார்.

கோலாலம்பூர்:

மொத்தம் ரூ.4 கோடி பரிசுத் தொகைக்கான மலேசியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் இன்று முதல் 25-ந் தேதி வரை நடக்கிறது.

ஆண்களுக்கான தகுதி சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் வெற்றி பெற்றார். சக நாட்டவர்களான சங்கர் சுப்பிரமணியன், தருண் மன்னிபல்லி ஆகியோர் தோல்வி அடைந்தனர்.

இதேபோல் பெண்களுக்கான தகுதிச்சுற்றில் இந்தியாவின் அன்மோல் கார்ப் தோல்வியடைந்தார். 

Tags:    

Similar News