விளையாட்டு

உலகக் கோப்பை குத்துச்சண்டை: தங்கம் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை நிகாத் ஜரீன்

Published On 2025-11-21 10:54 IST   |   Update On 2025-11-21 10:54:00 IST
  • பெண்களுக்கான 51 கிலோ எடைப்பிரிவில் நிகாத் ஜரீன்- குவா யி ஜியான் மோதினர்.
  • இந்த போட்டியில் 5-0 என்ற கணக்கில் நிகாத் தங்கப்பதக்கத்தை வென்றார்.

உலகக் கோப்பை குத்துச்சண்டை போட்டியின் இறுதி சுற்று உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் நடந்தது. இதில் நேற்று நடந்த போட்டிகளில் இந்திய வீராங்கனைகள் பிரமாதமாக செயல்பட்டு அசத்தியதுடன், பாரீஸ் ஒலிம்பிக்கில் சந்தித்த ஏமாற்றத்துக்கு பரிகாரம் தேடிக்கொண்டனர்.

பெண்களுக்கான 51 கிலோ எடைப்பிரிவில் 2 முறை உலக சாம்பியனான இந்திய நட்சத்திர வீராங்கனை நிகாத் ஜரீன் இறுதி சுற்றில் 5-0 என்ற கணக்கில் சீன தைபேயின் குவா யி ஜியானை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை முத்தமிட்டார்.

வெற்றி குறித்து நிகாத் கூறியதாவது:-

இன்றைய போட்டியில் சொந்த மைதானத்தில் ரசிகர்கள் முன்னிலையில் வெற்றி பெற்றதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். மிக நீண்ட இடைவேளைக்குப் பிறகு, எனது தங்கப் பயணத்தைத் தொடங்க முடிந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். மேலும் எதிர்காலத்தில் இதே வழியில் நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன் என்று நம்புகிறேன் என கூறினார்.

Tags:    

Similar News