விளையாட்டு

ஆசிய சாம்பியன் கோப்பை ஹாக்கி - மலேசியாவை 5- 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது இந்தியா

Published On 2023-08-06 17:09 GMT   |   Update On 2023-08-06 17:09 GMT
  • முதல் பாதியில் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது.
  • இரண்டாவது பாதியிலும் இந்தியா கோல் மழை பொழிந்து அசத்தியது.

சென்னை:

7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

இந்நிலையில், இரவு 8.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் இந்திய அணி மலேசியாவுடன் மோதியது.

ஆட்டத்தின் முதல் பாதியில் 18-வது நிமிடத்தில் இந்தியா ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியிலும் இந்திய வீரர்கள் 4 கோல் அடித்து அசத்தினர்.

இறுதியில் இந்திய அணி 5-0 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது.

Tags:    

Similar News