விளையாட்டு

பெண்களுக்கான ஆசிய கோப்பை ஹாக்கி: சூப்பர் 4 சுற்றில் கொரியாவை 4-2 என வீழ்த்தியது இந்தியா

Published On 2025-09-10 18:23 IST   |   Update On 2025-09-10 18:23:00 IST
  • முதல் காலிபகுதி ஆட்ட நேர முடிவில் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது.
  • 3ஆவது கால்பகுதி ஆட்டத்தில் 2 கோல்கள் அடித்தது வெற்றிக்கு உதவியது.

பெண்களுக்கான ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற சூப்பர் 4 சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியா- கொரியா அணிகள் மோதின. இதில் இந்தியா 4-2 என வெற்றி பெற்றது.

ஆட்டம் தொடங்கிய 2ஆவது நிமிடத்திலேயே இந்திய வீராங்கனை பால்கே வைஷ்ணவி வித்தால் முதல் கோல் அடித்தார். இதனால் முதல் கால்பகுதி (முதல் 15 நிமிடம்) ஆட்டத்தில் இந்தியா 1-0 என முன்னிலைப் பெற்றது. 2ஆவது கால்பகுதி ஆட்டத்தில் இரு அணி வீராங்கனைகளும் கோல் அடிக்கவில்லை.

3ஆவது கால்பகுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனைகள் இரண்டு கோல்களும், கொரிய வீராங்கனைகள் ஒரு கோலும் அடித்தனர். ஆட்டத்தின் 33ஆவது நிமிடத்தில் குமாரி சங்கீதா கோல் அடித்தார். அதேவேளையில் கொரியா வீராங்கனை கிம் யுஜினும் கோல் (பெனாடில் கார்னர்) அடித்தார். பின்னர் 40ஆவது நிமிடத்தில் லால்ரெம்சியாமி கோல் அடிக்க 3ஆவது கால்பகுதி ஆட்டம் முடிவில் இந்தியா 3-1 என முன்னிலை பெற்றது.

4ஆவது மற்றும் கடைசி கால்பகுதி ஆட்டத்தில் 53ஆவது நிமிடத்தில் தென்கொரிய வீராங்கனை கிம் யுஜின் பெனால்டி கார்னரை பயன்படுத்தி கோல் அடித்தார். ஆட்டம் முடிவடைவதற்கு முந்தைய நிமிடமான 59ஆவது நிமிடத்தில் இந்திய வீராங்கனை பிசால் ருதுஜா தாதாசோ கோல் அடிக்க இந்தியா 4-2 என வெற்றி பெற்றது.

நாளை இந்தியா சீனாவை எதிர்கொள்கிறது. 13ஆம் தேதி சிங்கப்பூருக்கு எதிராக விளையாடுகிறது. சூப்பர்4 சுற்றில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தும்.

Tags:    

Similar News