கிரிக்கெட் (Cricket)

பேட் விஷயத்தில்..! அபிஷேக் சர்மா குறித்து யுவராஜ் சிங் சுவாரஸ்ய தகவல்

Published On 2025-11-09 16:36 IST   |   Update On 2025-11-09 16:36:00 IST
  • ஆசிய கோப்பை, ஆஸ்திரேலியா தொடர்களில் தொடர் நாயகன் விருதை வென்றார்.
  • நட்சத்திர தொடக்க வீரராக உருவெடுத்து வருகிறார்.

இந்திய டி20 அணியின் தொடக்க வீரராக அபிஷேக் சர்மா களம் இறங்கி வருகிறார். தனது அதிரடி ஆட்டத்தால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். ஆசிய கோப்பை மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடி இரண்டு தொடர்களிலும் தொடர் நாயகன் விருதை கைப்பற்றினார்.

அபிஷேக் சர்மாவுக்கு, இந்திய அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் யுவராஜ் சிங் ஆலோசனை வழங்கினார். பேட்டிங் குறித்து நுட்பங்களை வழங்கியுள்ளார்.

இந்த நிலையில் சிறப்பாக விளையாடும் அபிஷேக் சர்மா குறித்து சுவாரஸ்ய தகவல் ஒன்றை யுவராஜ் சிங் கூறியுள்ளார்.

அபிஷேக் சர்மா குறித்து யுவராஜ் சிங் கூறுகையில் "நீங்கள் அபிஷேக் சர்மாவிடம் இருந்து எதை வேண்டுமென்றாலும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால், அவரிடம் இருந்து யாரும் பேட்டை மட்டும் வாங்க முடியாது. அதற்காக அவர் சண்டையிடுவார். அழக்கூட செய்வார். இருந்தாலும் பேட்டை விட்டுக்கொடுக்க விரும்பமாட்டார். 10 பேட் வைத்திருந்தாலும், இரண்டு பேட் மட்டுமே வைத்துள்ளேன் என்பார். என்னுடைய எல்லா பேட்டையும் எடுத்துக் கொண்டார். ஆனால், அவருடைய ஒரு சொந்த பேட்டை ஒருபோதும் கொடுக்கமாட்டார்" என்றார்.

Tags:    

Similar News