கிரிக்கெட் (Cricket)

மகளிர் கிரிக்கெட்: இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

Published On 2025-07-17 10:39 IST   |   Update On 2025-07-17 10:39:00 IST
  • இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 258 ரன்கள் எடுத்தது.
  • சிறப்பாக விளையாடிய தீப்தி சர்மா 62 ரன்கள் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார்

இந்திய மகளிர் அணி டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது. இதில் முதலில் நடந்த டி20 தொடரை இந்தியா 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 258 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சோபியா டங்க்லி 83 ரன்கள் அடித்தார். இந்திய அணி தரப்பில் கிராந்தி கவுட், சினே ராணா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனையடுத்து 259 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 48.2 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 262 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. சிறப்பாக விளையாடி 62 ரன்கள் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்ட தீப்தி சர்மாவுக்கு ஆட்ட நாயகி விருது வழங்கப்பட்டது.

Tags:    

Similar News