மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்: ஒரு வெற்றி கூட பெறாமல் வெளியேறியது பாகிஸ்தான்
- 3 போட்டிகளில் மழையால் ரத்து செய்யப்பட்டன.
- 4 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.
மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான் அணி விளையாடும் போட்டிகள் மட்டும் கொழும்பில் நடைபெற்றன.
ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். அதன்படி 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில், ஒவ்வொரு அணியும் 7 போட்டிகளில் விளையாடும். முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணி அரையிறுதிக்கு முன்னேறும்.
பாகிஸ்தான் அணி இன்று இலங்கையை எதிர்கொண்டது. முதலில் பாகிஸ்தான் பேட்டிங் செய்தது. மழை குறுக்கீடு செய்ததால், ஆட்டம் 34 ஓவராக குறைக்கப்பட்டது. 4.2 ஓவரில் 18 ரன்கள் எடுத்திருக்கும்போது, மீண்டும் மழை குறுக்கீட்டது. இதனால் ஆட்டம் அத்துடன் நிறுத்தப்பட்டு, கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் 7 லீக் போட்டிகளிலும் விளையாடிவிட்டன. இலங்கை 7 போட்டிகளில் ஒன்றில் வெற்றி, 3 போட்டிகளில் முடிவு இல்லை ஆகிவற்றின்மூலம் 5 புள்ளிகள் பெற்றுள்ளது.
பாகிஸ்தான் ஒரு போட்டிகளில் கூட வெற்றி பெறவில்லை. 3 போட்டிகளில் முடிவு இல்லை என்பதன் மூலம் 3 புள்ளிகள் பெற்றுள்ளது.
இன்றைய போட்டியுடன் இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான பாகிஸ்தான் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டுள்ளது.