மகளிர் உலக கோப்பை: பாகிஸ்தானை பந்தாடியது ஆஸ்திரேலியா
- ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்பிற்க 115 ரன்கள் எடுத்திருந்தது.
- 9ஆவது விக்கெட்டுக்கு 106 ரன்கள் குவித்தது.
மகளிர் உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான்- ஆஸ்திரேலியா போட்டி கொழும்பில் நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் சிறப்பாக பந்து வீசினர். முதல் மூன்று விக்கெட்டுகளை மளமளவென வீழ்த்தினர்.
ஆனால் 4ஆவது வீராங்கனையாக களம் இறங்கிய பெத் மூனி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 114 பந்தில் 109 ரன்கள் விளாசி கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். கடைசி வீராங்கனை அலனா கிங் 49 பந்தில் 51 ரன்கள் எடுத்து அட்டமிழக்காமல் இருக்க ஆஸ்திரேலியா மகளிர் அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் சேர்த்தது. ஒரு கட்டத்தில் 115 ரன்னுக்குள் 8 விக்கெட்டுகளை இழந்தது. 9ஆவது விக்கெட்டுக்கு 106 ரன்கள் குவித்துவிட்டது.
பின்னர் 222 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களம் இறங்கியது. சித்ரா அமினை (35) தவி மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
கேப்டன் சானா (11), நஷ்ரா சாந்து (11), ரமீன் ஷமிம் (20) இரட்டை இலக்க ரன்கள் அடிக்க 36.3 ஓவரில் 114 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆகி 107 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் படுதோல்வியடைந்தது. ஆஸ்திரேலியா அணியில் கிம் கார்த் 3 விக்கெட்டும், மேகம் ஸ்கட் மற்றும் சுதர்லேண்டு ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்த தோல்வியின் மூலம் பாகிஸ்தான் விளையாடிய 3 போட்டிகளில் தோல்வியடைந்து புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தை பிடித்துள்ளது. ஆஸ்திரேலியா 3-ல் 2 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. இலங்கைக்கு எதிரான போட்டி கைவிடப்பட்டது.