கிரிக்கெட் (Cricket)

இங்கிலாந்து டெஸ்ட் தொடர் சாய் சுதர்சனை தேர்வு செய்தது ஏன்? தேர்வுக்குழு தலைவர் விளக்கம்

Published On 2025-05-25 13:01 IST   |   Update On 2025-05-25 13:01:00 IST
  • 23 வயதான சாய் சுதர்ஷன் இந்திய டெஸ்ட் அணியில் முதல் முறையாக இடம் பெற்றுள்ளார்.
  • சிறந்த உயர்மட்ட திறனை வெளிப்படுத்தும் திறமை கொண்ட ஆட்டக்காரர்.

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. அடுத்த மாதம் (ஜூன்) 20-ந்தேதி முதல் ஆகஸ்ட் 4-ந்தேதி வரை இந்த தொடர் நடைபெற உள்ளது.

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்படுகிறது. அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வு குழு 18 வீரர்களை அறிவித்தது.

சுப்மன்கில் இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ரோகித்சர்மா ஓய்வு பெற்றதால் அவருக்கு அந்த பொறுப்பு வழங்கப்படவில்லை. ரிஷப்பண்ட் துணை கேப்டனாக தேர்வாகி உள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்ஷன், கருண் நாயர் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சர் பிராஸ் அகமது, முகமது ஷமிக்கு டெஸ்ட் அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

23 வயதான சாய் சுதர்ஷன் இந்திய டெஸ்ட் அணியில் முதல் முறையாக இடம் பெற்றுள்ளார்.

சாய் சுதர்ஷனுக்கு வாய்ப்பு வழங்கபட்டதை குறித்து தேர்வு குழு தலைவர் அஜீத் அகர்கர் கூறியதாவது:-

இங்கிலாந்து லயன்ஸ் அணி (இங்கிலாந்து ஏ) இந்தியா வந்த போது சாய் சுதர்ஷன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஐ.பி.எல். செயல்பாடு காரணமாக அவரை அணியில் தேர்வு செய்யவில்லை. சிறந்த உயர்மட்ட திறனை வெளிப்படுத்தும் திறமை கொண்ட ஆட்டக்காரராக அவர் உள்ளார்.

இவ்வாறு அகர்கர் கூறினார்.

சாய் சுதர்ஷன் நடப்பு ஐ.பி.எல். போட்டியில் 13 ஆட்டங்களில் விளையாடி 638 ரன்கள் எடுத்து முதல் இடத்தில் உள்ளார். இங்கி லாந்து கவுன்டி போட்டியில் விளையாடிய அனுபவம் அவருக்கு உண்டு. சர்ரே அணிக்காக 2023 மற்றும் 2024 சீசன் என மொத்தம் 8 இன்னிங்சில் 281 ரன்கள் எடுத்துள்ளார்.

மேலும் உள்ளூர் போட்டியிலும் சாய் சுதர்ஷ னின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. 29 முதல் தர போட்டிகளில் 1,957 ரன் கள் எடுத்துள்ளார்.

இந்திய அணிக்காக 3 ஒருநாள் மற்றும் ஒரு 20 ஓவர் ஆட்டத்தில் விளையாடி உள்ளார்.

Tags:    

Similar News