கிரிக்கெட் (Cricket)

வெஸ்ட் இண்டீஸ் மீண்டும் தோல்வி- தொடரை வென்றது ஆஸ்திரேலியா

Published On 2025-07-07 09:52 IST   |   Update On 2025-07-07 09:52:00 IST
  • 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
  • இரு அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி வருகிற 12-ந் தேதி நடக்கிறது.

வெஸ்ட் இண்டீஸ்-ஆஸ்திரேலியா இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி செயின்ட் ஜார்ஜ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா, முதல் இன்னிங்சில் 286 ரன் குவித்தது.

வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 253 ரன்னில் ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சில் 244 ரன் எடுத்தது. 277 ரன் இலக்குடன் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 2-வது இன்னிங்சில் 143 ரன்னில் சுருண்டது.

இதனால் ஆஸ்திரேலியா 133 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஏற்கனவே முதல் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் தோற்று இருந்தது. இதனால் 3 போட்டி கொண்ட தொடரை இழந்தது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இரு அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி வருகிற 12-ந் தேதி நடக்கிறது.

Tags:    

Similar News