கிரிக்கெட் (Cricket)

முதல் டி20 போட்டி: 7 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்

Published On 2025-11-05 22:58 IST   |   Update On 2025-11-05 22:58:00 IST
  • இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி இன்று நடந்தது.
  • டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீசுவதாக அறிவித்தது.

ஆக்லாந்து:

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20, 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. முதலில் டி20 போட்டிகள் நடந்து வருகிறது.

இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி இன்று நடந்தது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீசுவதாக அறிவித்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 164 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஷாய் ஹோப் 53 ரன் எடுத்தார். ரோவ்மன் பவல் 33 ரன்னிலும், ரோஸ்டன் சேஸ் 28 ரன்னிலும் அவுட் ஆகினர்.

நியூசிலாந்து சார்பில் ஜேக்கப் டபி, போல்க்ஸ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 165 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. ஆரம்பம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தன.

ஆனாலும் கேப்டன் மிட்செல் சாண்ட்னர் தாக்குப்பிடித்து அரை சதம் கடந்து போராடி 55 ரன்கள் எடுத்தார்.

இறுதியில், நியூசிலாந்து 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருது ரோஸ்டன் சேசுக்கு வழங்கப்பட்டது.

Tags:    

Similar News