கிரிக்கெட் (Cricket)
null

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 2-வது அணி- மோசமான சாதனை படைத்த வெஸ்ட் இண்டீஸ்

Published On 2025-07-15 16:23 IST   |   Update On 2025-07-15 17:16:00 IST
  • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் 27 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
  • ஒரு இன்னிங்சில் மிகக் குறைந்த ஸ்கோரைப் பதிவுசெய்த 2-வது அணி எனும் மோசமான சாதனையை வெஸ்ட் இண்டீஸ் அணி படைத்துள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக ஜமைக்காவில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 225 ரன்களில் ஆல் அவுட்டான நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 143 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 80 ரன்கள் முன்னிலைப் பெற்றது.

பின்னர் 2-வது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 121 ரன்களில் ஆல் அவுட்டாகி 202 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது. இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி வெறும் 27 ரன்களில் ஆல் அவுட்டானதுடன் 176 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்நிலையில் இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2-வது இன்னிங்சில் 14.3 ஓவர்களை மட்டுமே எதிர்கொண்டு வெறும் 27 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்சில் மிகக் குறைந்த ஸ்கோரைப் பதிவுசெய்த 2-வது அணி எனும் மோசமான சாதனையை வெஸ்ட் இண்டீஸ் அணி படைத்துள்ளது. இதற்கு முன் கடந்த 1955-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக நியூசிலாந்து அணி 26 ரன்களுக்கு ஆல் அவுடானதே மோசமான சாதனையக இருந்து வருகிறது.

இதற்கடுத்த மூன்று குறைந்தபட்ச ஸ்கோரை தென் ஆப்பிரிக்க அணி பதிவுசெய்துள்ளது. அதன்படி அந்த அணி 1896-ம் ஆண்டு இங்கிலாந்துகு எதிராக 30 ரன்களிலும், 1924-ம் ஆண்டு 30 ரன்னிலும், 1899-ம் ஆண்டு 35 ரன்களிலும் என ஒரு இன்னிங்சில் ஆல் அவுட்டானது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News