அவரை கண்டிப்பாக மிஸ் செய்கிறோம்: வெற்றிக்கு பிறகு ஜடேஜா அளித்த பேட்டி
- இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் அகமதாபாத்தில் நடந்தது.
- இதில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அகமதாபாத்:
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதனால் டெஸ்ட் தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது. 104 ரன் மற்றும் 4 விக்கெட் வீழ்த்திய ஜடேஜா ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில், உங்களது பார்ட்னர் அஸ்வினை மிஸ் செய்கிறீர்களா என்ற கேள்விக்கு ஜடேஜா கூறுகையில், டெஸ்ட் போட்டிகளில் நாங்கள் அஸ்வினை கண்டிப்பாக மிஸ் செய்கிறோம். பல ஆண்டாக இந்திய அணிக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார். அவர் போட்டியை வென்று கொடுப்பவர். டெஸ்ட் போட்டிகளின்போது அஸ்வின் பந்து வீச வேண்டும் என தோன்றும். ஆனால் அவர் அணியில் இல்லை என்பதை உணர்வேன் என உருக்கமாகத் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் என்னுடைய இடத்துக்கு வேறு ஒரு வீரர் வருவார். இது கண்டிப்பாக நடக்கும் என தெரிவித்தார்.