கிரிக்கெட் (Cricket)

பேட்டிங் வரிசையில் ஏற்றம் இறக்கம்: வாஷிங்டன் சுந்தர் அளித்த பதில்..!

Published On 2025-11-25 07:45 IST   |   Update On 2025-11-25 07:45:00 IST
  • நான் எந்த சூழ்நிலையில் இருக்கிறேன் என்பது விசயம் அல்ல.
  • அந்த வழி எனக்கு மிகவும் உற்சாகமாக இருக்கிறது.

இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் தொடரில் இந்தியா தடுமாறி வருகிறது. முதல் போட்டியில் தோல்வியடைந்த நிலையில், 2-வது போட்டியில் மோசமான நிலையில் உள்ளது.

முதல் போட்டியில் யாரும் எதிர்பாராத வகையில் வாஷிங்டன் சுந்தர் 3-வது வரிசையில் பேட்டிங் செய்ய களம் இறக்கப்பட்டார். தற்போது நடைபெற்று வரும் 2-வது போட்டியில் 8-வது இடத்தில் களம் இறக்கப்பட்டார். நேற்று 48 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அடிக்கடி பேட்டிங் வரிசை மாற்றப்படுவது குறித்த கேள்விக்கு வாஷிங்டன் சுந்தர் அளித்த பதில் பின்வருமாறு:-

அணி என்னை எங்கு பேட்டிங் செய்ய விரும்புகிறதோ அங்கு பேட்டிங் செய்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என்று கூறுவேன். அந்த வகையில், இது மிகவும் உற்சாகமானது. இது ஒரு டீம் கேம்.

உண்மையைச் சொன்னால், அணி தேவைப்படும் போதெல்லாம், அணி என்னை எங்கு பேட்டிங் செய்து பந்து வீசச் சொல்ல விரும்புகிறதோ அதற்கு தயாராக இருக்கும் கிரிக்கெட் வீரராக நான் இருக்க விரும்புகிறேன். நான் தயாராக இருக்க வேண்டும். அணிக்காக சிறப்பான ஆட்டத்தை கொடுக்க வேண்டும். இதுதான் என்னுடைய மனநிலை.

நான் எந்த சூழ்நிலையில் இருக்கிறேன் என்பது விசயம் அல்ல. அந்த வழி எனக்கு மிகவும் உற்சாகமாக இருக்கிறது. எனக்கும் வித்தியாசமான ரோல்களில் விளையாட முடிகிறது. பலருக்கு அந்த வாய்ப்பு கிடைக்காது என்று நினைக்கிறேன். எனவே, இது உற்சாகமாக மட்டுமே.

இவ்வாறு வாஷிங்டன் சுந்தர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News