கிரிக்கெட் (Cricket)

ஸ்டார்க் ஓவரில் 6 பறக்க விட்ட விராட்.. பாதுகாவலர் காயம்

Published On 2024-11-24 16:40 IST   |   Update On 2024-11-24 16:40:00 IST
  • இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 487 ரன்களை எடுத்து டிக்ளேர் செய்தது.
  • தொடர்ந்து பொறுப்புடன் விளையாடிய விராட் கோலி சதமடித்து அசத்தினார்.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை (2024-25) தொடரின் முதல் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி நேற்றைய 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 172 ரன்கள் எடுத்திருந்தது.

தொடர்ந்து, இன்று நடைபெற்ற 3-ம் நாள் ஆட்டம் போட்டியில், விக்கெட்டுகள் இழந்தாலும் மறுபுறம் விராட் கோலி சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தார் .தொடர்ந்து பொறுப்புடன் விளையாடிய விராட் கோலி சதமடித்து அசத்தினார்.

இதைதொடர்ந்து, இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 487 ரன்களை எடுத்து டிக்ளேர் செய்தது.

இந்நிலையில், பெர்த் டெஸ்டின் 3-வது நாளில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் பந்தில் விராட் கோலி விளாசிய சிக்ஸரில் பாதுகாவலர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

மைதானத்தில், நாற்காலியில் அமர்ந்து கூட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்த பாதுகாவலரின் தலையில் பந்து தாக்கியுள்ளது. இதில், காயம் அடைந்துள்ளார். இதைக்கண்ட சக ஆஸ்திரேலிய வீரர் பாதுகாவலரை ஆசுவாசப்படுத்தினர். 

Tags:    

Similar News