கிரிக்கெட் (Cricket)

2025-ம் ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருது வெல்வாரா விராட் கோலி?

Published On 2025-12-14 00:11 IST   |   Update On 2025-12-14 00:11:00 IST
  • 2025-ம் ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருதுக்கான பரிந்துரை பட்டியலை ஐசிசி வெளியிட்டது.
  • இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய வீரர் விராட் கோலி மட்டுமே ஆவார்.

துபாய்:

ஒவ்வொரு ஆண்டும் சிறந்த டெஸ்ட், ஒருநாள், டி20 அணிகள் மற்றும் சிறந்த வீரர், வீராங்கனைகளைத் தேர்வு செய்து ஐ.சி.சி. கவுரவித்து வருகிறது.

ஆண்டு முழுவதும் வீரர், வீராங்கனைகள் சிறப்பாக செயல்பட்ட விதத்தைக் கணக்கில் கொண்டு இந்த கவுரவத்துக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

இந்நிலையில், 2025-ம் ஆண்டிற்கான சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருதுக்கு 10 வீரர்களின் பெயர்களை ஐ.சி.சி. பரிந்துரை செய்துள்ளது. இதில் இடம்பெற்றுள்ள 10 வீரர்களின் விவரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

2025-ம் ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ள வீரர்களின் விவரம்:-

இந்தியாவின் விராட் கோலி, தென் ஆப்பிரிக்காவின் மேத்யூ பிரீட்ஸ்கே, இங்கிலாந்தின் ஜோ ரூட் மற்றும் அடில் ரஷீத், வெஸ்ட் இண்டீசின் ஷாய் ஹோப் மற்றும் ஜெய்டன் சீல்ஸ், நியூசிலாந்தின் டேரில் மிச்செல், மேட் ஹென்றி மற்றும் மிட்சல் சாண்ட்னர், ஜிம்பாப்வேவின் சிக்கந்தர் ராசா உள்ளிட்டோர் இடம்பிடித்துள்ளனர்.

இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய வீரர் விராட் கோலி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டில் விராட் கோலி 13 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 651 ரன்கள் குவித்துள்ளார். இதில் 3 சதங்களும், 4 அரை சதங்களும் அடங்கும்.

Tags:    

Similar News