இன்னும் 25 ரன்கள்: சச்சின் சாதனையை முறியடிப்பாரா விராட் கோலி
- சர்வதேச கிரிக்கெட்டில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே விராட் கோலி விளையாடி வருகிறார்.
- சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில், அடுத்தடுத்து சதமடித்து அசத்தினார்.
அகமதாபாத்:
சர்வதேச கிரிக்கெட்டில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே விராட் கோலி விளையாடி வருகிறார். ஒருநாள் கிரிக்கெட்டிலும் தொடர்ச்சியாக ரன்களைக் குவித்து வருகிறார்.
சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில், அடுத்தடுத்து சதமடித்து அசத்தினார்.
இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் விராட் கோலி சாதனை ஒன்றை படைக்க உள்ளார்.
விராட் கோலி இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் 27,975 ரன்களை எடுத்துள்ளார். இன்னமும் 25 ரன்களை எடுக்கும் பட்சத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் அதிவிரைவாக 28,000 ரன்களை எடுத்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்து விடுவார்.
சச்சின் டெண்டுல்கர் மற்றும் குமார் சங்ககரா ஆகியோர் 28,000 ரன்களைக் கடந்துள்ளனர்.
சச்சின் 664 போட்டிகளில் 782 இன்னிங்ஸ்களில் 34,357 ரன்களை எடுத்தார். 1989 முதல் 2013 வரை இவர் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடினார். சராசரி, 48.52ஆக இருக்கிறது. 100 சதம், 164 அரை சதங்களை சச்சின் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.