கைகுலுக்க மறுத்த விவகாரம்: இந்தியாவை கேலி செய்யும் வீடியோ - ஆஸ்திரேலிய கேப்டன் கருத்து
- ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் வீரர்களுக்கு இந்திய வீரர்கள் கை குலுக்க மறுத்தனர்.
- இந்த நிகழ்வை கிண்டல் செய்யும் வகையில் ஆஸ்திரேலியா வீரர்கள் சைகை செய்து காட்டினர்.
ஆசிய கோப்பை கிரிக் கெட் போட்டி சமீபத்தில் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்றது. இதில் சூர்ய குமார் யாதவ் தலைமை யிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் பெற்றது. இந்தப் போட்டித் தொடரில் இந்திய அணி 3 முறையும் பாகிஸ்தானை தோற்கடித்து இருந்தது.
ஆசிய கோப்பை கிரிக் கெட்டில் பாகிஸ்தான் வீரர் களுடன் இந்திய வீரர்கள் கைகுலுக்க மறுத்துவிட்ட னர். பகல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிரொலி யாக இந்திய வீரர்கள் இந்த முடிவை எடுத்தனர். போட்டி முடிந்த பிறகு இரு அணி வீரர்களும் கைகுலுக் குவது வாடிக்கையானது. ஆனால் கைகுலுக்கும் நிகழ்வை இந்தியா புறக் கணித்து விட்டது. இது மிகுந்த சர்ச்சையை ஏற் படுத்தியது.
மேலும் ஆசிய கோப் பையை பாகிஸ்தான் கிரிக் கெட் வாரிய தலைவரும், அந்நாட்டு மந்திரியுமான மோஷின் நக்வியிடம் இருந்து வாங்க சூர்யகுமார் யாதவ் மறுத்து விட்டார்.
இதற்கிடையே பாகிஸ் தானுக்கு எதிராக இந்திய வீரர்கள் கைகுலுக்காததை வைத்து ஆஸ்திரேலிய வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற கேலி வீடியோ ஒன்று வெளியானது. இந்தியா-ஆஸ்தி ரேலியா ஒருநாள் தொடரை யொட்டி இந்த விளம்பர வீடியோவை கயோ ஸ்போர்ட்ஸ் வெளியிட்டது.
அந்த வீடியோவில், வர்ணனையாளர் இயன் ஹிக்கின்ஸ், இந்திய வீரர்களின் "மிகப்பெரிய பலவீனம்" என்று கூறி, கை குலுக்காத விஷயத்தைக் குறிப்பிடுகிறார். அதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய வீரர்களான ஜோஷ் ஹேசில்வுட், மிட்ச் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், அலிசா ஹீலி, அலானா கிங் மற்றும் சோஃபி மோலினக்ஸ் ஆகியோர், கை குலுக்கலுக்குப் பதிலாக என்னென்ன 'வாழ்த்துக்களை' தெரிவிக்கலாம் என்று தங்களது பாணியில் செய்து காட்டுகின்றனர்.
அப்போது ஆஸ்திரேலிய மகளிர் அணி வீராங்கனை சோஃபி மோலினக்ஸ், தனது இரண்டு நடுவிரல்களையும் கேமராவை நோக்கிக் காட்டி, 'bras d'honneur' எனப்படும் இத்தாலிய சைகையையும் செய்தார். இது மிக மோசமான சைகையாகும்.
மற்றொரு வீரரான ஜோஷ் ஹேசில்வுட், துப்பாக்கியால் சுடுவது போன்ற சைகையைச் செய்தது, மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கிளென் மேக்ஸ்வெல், ஆலிசா ஹீலி. மிட்செல் மார்ஷ் போன்ற மற்ற வீரர்கள் தங்கள் பங்குக்கு கேலி செய்யும் வகையில் சில சைகைகளை செய்து இப்படிதான் இந்திய அணிக்கு கைகுலுக்காமல் வித்தியாசமான வரவேற்பை அளிக்கலாம் என கூறினர்.
இந்த வீடியோ வெளியான சில நிமிடங்களிலேயே, இந்திய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பொங்கி எழுந்தனர். இந்திய ரசிகர்களின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து, 'காயோ ஸ்போர்ட்ஸ்' தளம், அந்த சர்ச்சைக்குரிய வீடியோவை சமூக வலைதளப் பக்கங்களிலிருந்தும் உடனடியாக நீக்கியது.
இந்நிலையில் இந்த கேலி வீடியோ குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் மிச் சேல் மார்ஷ் மவுனம் கலைத்துள்ளார். இது தொடர்பாக அவரிடம் நேற்று நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதில் அளித்து பேசிய மார்ஷ், "நான் உண்மையில் அந்த விளம்பரத்தை பார்க்க வில்லை. அதில் பிரச்சினை உள்ளதா? என்று எனக்கு தெரியவில்லை. அதைப்பற்றி நான் கருத்து தெரிவிக்க வேண்டியது இல்லை.
இந்தியா-ஆஸ்திரேலியா வீரர்கள், ரசிகர்கள் இடை யே ஒரு சிறப்பு பெற்றதாக இந்த தொடர் இருக்கும். இந்த தொடரின் 3 ஆட்டத்துக்கு 1.75 லட்சம் டிக்கெட்டுகள் விற்று விட்டதாக கூறப்படுகிறது. வீராட் கோலி, ரோகித் சர்மா ஆஸ்திரேலியாவில் விளையாடும் கடைசி போட்டி என்பதால் ரசிகர் களின் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது" என்று தெரிவித்தார்.