கிரிக்கெட் (Cricket)

விஜய் படத்தை டாட்டூ போட்டுக் கொண்ட வருண் சக்கரவர்த்தி- வைரல் புகைப்படம்

Published On 2025-01-25 15:54 IST   |   Update On 2025-01-25 15:54:00 IST
  • இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வருண் சக்கரவர்த்தி ஆட்டநாயகன் விருதை வென்றார்.
  • இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டி20 போட்டி இன்று சென்னையில் நடக்கிறது.

சென்னை:

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் கொல்கத்தாவில் நடந்த முதலாவது போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசிய தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.

டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு வரும் வருண் சக்கரவர்த்தி இன்று சொந்த மண்ணான சென்னையில் இன்று இந்திய அணிக்காக முதல் முறையாக விளையாட உள்ளார்.


இந்நிலையில் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜயின் படத்தை வருண் சக்கரவர்த்தி அவரது கையில் பச்சை குத்தியுள்ளார். தலைவா படத்தில் வரும் பிரபலமான விஜயின் போஸ்-ஐ அவர் பச்சை குத்தியுள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News