கிரிக்கெட் (Cricket)
ஆஷஸ் தொடரின் 5-வது டெஸ்ட்: ஜோ ரூட், ஹாரி ப்ரூக் ஆட்டத்தால் முதல் நாளில் இங்கிலாந்து 211/3
- இங்கிலாந்து அணி 57 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது.
- ஜோ ரூட், ஹாரி ப்ரூக் அரைசதம் அடிக்க இங்கிலாந்து மேலும் விக்கெட்டுகளை இழக்கவில்லை.
ஆஷஸ் தொடரின் 5-வது மற்றும் கடைசி போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது.
அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஜாக் கிராலி (16), பென் டக்கெட் (27), ஜேக்கப் பெத்தேல் (10) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் இங்கிலாந்து 57 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது.
4-வது விக்கெட்டுக்கு ஜோ ரூட் உடன் ஹாரி ப்ரூக் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று விளையாடியது. இருவரும் அரைசதம் கடந்தனர்.
இங்கிலாந்து அணி 45 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்திருக்கும்போது, வெளிச்சமின்மை காரணமாக முதல்நாள் ஆட்டம் முடிவடைந்தது. ஜோ ரூட் 72 ரன்களுடனும், ஹாரி ப்ரூக் 78 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலியா அணி சார்பில் ஸ்டார்க், நேசர், போலண்ட் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.