கிரிக்கெட் (Cricket)

சடசடவென சரிந்த விக்கெட்: 2வது டி20 போட்டியில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா

Published On 2026-02-20 02:13 IST   |   Update On 2026-02-20 02:13:00 IST
  • டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பவுலிங் தேர்வு செய்தது.
  • முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 163 ரன்கள் சேர்த்தது.

சிட்னி:

இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதல் டி 20 போட்டியில் மழை காரணமாக டக்வொர்த் லெவிஸ் முறைப்படி இந்தியா வெற்றி பெற்றது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி கான்பெராவில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 163 ரன்கள் சேர்த்தது. தொடக்க வீராங்கனை ஜார்ஜியா வோல் 57 பந்தில் 88 ரன்கள் குவித்தார். பெத் மூனி 46 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து, 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு இந்திய அணி களமிறங்கியது. ஷபாலி வர்மா 29 ரன்னும், ஸ்மிருதி மந்தனா 31 ரன்னும் எடுத்தனர். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் அதிகபட்சமாக 36 ரன்கள் எடுத்தார். மற்ற வீராங்கனைகள் நிலைத்து நிற்கவில்லை.

இறுதியில், இந்திய அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 144 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 19 ரன்கள் இத்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. டி20 தொடர் 1-1 என சமனில் உள்ளது.

இந்திய அணியின் கடைசி 6 விக்கெட்கள் வெறும் 7 ரன்னில் வீழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News