கிரிக்கெட் (Cricket)

டி.என்.பி.எல் 2025: திருச்சி வெற்றிபெற 132 ரன்களை இலக்காக நிர்ணயித்தது மதுரை

Published On 2025-06-25 21:02 IST   |   Update On 2025-06-25 21:02:00 IST
  • டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
  • மதுரை அணி 29 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது.

திருநெல்வேலி:

டி.என்.பி.எல். தொடரின் 23-வது லீக் போட்டி திருநெல்வேலியில் நடந்து வருகிறது. இதில் திருச்சி கிராண்ட் சோழாஸ், மதுரை பாந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, மதுரை அணி முதலில் களமிறங்கியது. திருச்சி அணியின் துல்லிய பந்துவீச்சினால் மதுரை அணி முன்னணி வீரர்களை இழந்து தத்தளித்தது. அந்த அணி 29 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

6-வது விக்கெட்டுக்கு இணைந்த அதிக் உர் ரகுமான்-சரத்குமார் ஜோடி 56 ரன்கள் சேர்த்த நிலையில் அதிக் உர் ரகுமான் 30 ரன்னில் அவுட்டானார்.

இறுதியில், மதுரை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 131 ரன்கள் எடுத்தது. 37 ரன்னுடன் சரத்குமார் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

திருச்சி அணி சார்பில் சரவணகுமார், ஈஸ்வரன், டேவிட்சன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருச்சி அணி களமிறங்குகிறது.

Tags:    

Similar News