6 விக்கெட்டுகள்... 77 ரன்கள்... WTC தொடரில் சாதனைகளை குவித்த ஸ்டார்க்
- ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்டார்க் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
- இங்கிலாந்து தரப்பில் பிரைடன் கார்ஸ் 4 விக்கெட்டும் பென் ஸ்டோக்ஸ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பிரிஸ்பேன்:
ஆஸ்திரேலியா- இங்கிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் பகல்-இரவு போட்டியாக (பிங்க் பந்து டெஸ்ட்) பிரிஸ்பேனில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 334 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜோ ரூட் 138 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். ஆஸ்திரேலியா தர்ப்பில் மிட்செல் ஸ்டார்க் 6 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
இதையடுத்து, களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 511 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஸ்டார்க் 77 ரன்கள் விளாசினார். இதனால் 177 ரன்கள் முன்னிலை பெற்றது. இங்கிலாந்து தரப்பில் பிரைடன் கார்ஸ் 4 விக்கெட்டும் பென் ஸ்டோக்ஸ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் பல சாதனைகளை ஸ்டார்க் படைத்துள்ளார். அதன்படி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 1000 ரன்கள் எடுத்த 9-வது வீரர் என்ற சாதனையை ஸ்டார்க் படைத்துள்ளார். WTC-ல் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் 9-வது இடத்தில் ஸ்டார்க் (1003) உள்ளார். 1020 ரன்களுடன் கம்மின்ஸ் 8-வது இடத்தில் உள்ளார்.
முதல் 7 இடங்கள் முறையே ஸ்மித் (4358), மார்னஸ் லெபுஷன் (4350), டிராவிஸ் ஹெட் (3477), கவாஜா (3290), டேவிட் வார்னர் (2423), அலெக்ஸ் கேரி (2099), கேமரூன் கிரீன் (1634) ஆகியோர் உள்ளனர்.
மேலும் WTC-ல் அதிக ரன்கள் மற்றும் 100 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்த வீரர்களில் ஸ்டார்க் 5-வது இடத்தை பிடித்துள்ளார். அவர் 51 போட்டிகளில் 1003 ரன்கள் 207 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். முதல் 4 இடங்களில் அஸ்வின், ஜடேஜா, பேட் கம்மின்ஸ், கிறிஸ் வோக்ஸ் உள்ளனர்.