கிரிக்கெட் (Cricket)

முடிவுக்கு வந்த DREAM11.. இந்திய அணியின் ஜெர்சி ஸ்பான்சர்ஷிப்புக்கு ஆர்வம் காட்டும் 2 நிறுவனங்கள்

Published On 2025-08-25 17:46 IST   |   Update On 2025-08-25 17:46:00 IST
  • DREAM11-உடனான உறவை முறித்துக் கொள்கிறோம் என பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா தெரிவித்துள்ளார்.
  • இதனால் ஆசிய கோப்பை தொடரின் போது புதிய ஸ்பான்சர் ஜெர்சியுடன் இந்திய அணி களமிறங்கும்.

சூதாட்டம் மற்றும் பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் கேம்களை தடை செய்யும் புதிய கேமிங் மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு சட்டமானது.

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளதால் DREAM11-உடனான உறவை முறித்துக் கொள்கிறோம் என பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா தெரிவித்துள்ளார். மேலும் வரும் காலங்களில் இதுபோன்ற நிறுவனங்களுடன் BCCI உறுதியாக தொடர்பு வைத்துக்கொள்ளாது எனவும் கூறினார்.

இதனால் ஆசிய கோப்பை தொடரின் போது புதிய ஸ்பான்சர் ஜெர்சியுடன் இந்திய அணி களமிறங்கும்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய ஸ்பான்சருக்கான போட்டி எதிர்பார்ப்புகளுடன் உள்ளது. இதில் முக்கியமாக டொயோட்டா மோட்டார் கார்ப்பரேஷன் மற்றும் ஃபின்டெக் ஸ்டார்ட் அப் ஆகிய நிறுவனங்கள் டீம் இந்தியாவின் டைட்டில் ஜெர்சி ஸ்பான்சராக ஆர்வம் காட்டியுள்ளன. 

Tags:    

Similar News