கிரிக்கெட் (Cricket)
டி20 உலகக் கோப்பையில் இடம்பிடித்த சஞ்சு சாம்சன்: வைரலாகும் பதிவு
- டி20 உலகக் கோப்பை போட்டி பிப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை இந்தியா, இலங்கையில் நடைபெறுகிறது.
- டி20 உலகக் கோப்பை தொடருக்கான 15 பேர் அடங்கிய இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
புதுடெல்லி:
10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது.
இந்நிலையில், டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அந்த அணியில் 15 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். துணை கேப்டன் சுப்மன் கில் அணியில் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக அக்சர் படேல் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், சஞ்சு சாம்சன் முதன்மை விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டது குறித்து சஞ்சு சாம்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நிறங்கள் நிச்சயம் மங்காது என பதிவிட்டது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.