கிரிக்கெட் (Cricket)

வங்கதேசம் - பாகிஸ்தான் குறித்த கேள்வி... ஆஸ்திரேலிய கேப்டன் அளித்த பதில்

Published On 2026-02-04 08:45 IST   |   Update On 2026-02-04 08:45:00 IST
  • இந்தியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி ஆடாது என்று அந்த நாட்டு அரசாங்கம் அறிவித்தது.
  • பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி இந்தியா வர மறுத்ததால் வங்காளதேச அணி நீக்கப்பட்டது.

கொழும்பு:

10-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 7-ந்தேதி முதல் அடுத்த மாதம் 8-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி இந்தியா வர மறுத்ததால் வங்காளதேச அணி நீக்கப்பட்டு ஸ்காட்லாந்து சேர்க்கப்பட்டது குறித்தும், இந்தியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி ஆடாது என்று அந்த நாட்டு அரசாங்கம் அறிவித்து இருப்பது பற்றியும் கருத்து கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்து மிட்செல் மார்ஷ் கூறுகையில், 20 ஓவர் உலகக் கோப்பை போட்டி தொடரில் பங்கேற்பது தொடர்பாக வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானின் முடிவுகள் குறித்து கருத்து தெரிவிக்க என்னிடம் எதுவுமில்லை.

உலகக் கோப்பையை வெல்லும் நோக்குடன் இந்த போட்டி தொடருக்கு செல்கிறோம். அதில் மட்டுமே நாங்கள் கவனம் செலுத்துகிறோம். ஆஸ்திரேலிய அணியின் பாதுகாப்பை உலகக் கோப்பை போட்டியை நடத்தும் நாட்டிலுள்ள மக்கள் பார்த்து கொள்வார்கள் என்று நம்புகிறோம் என்றார்.

Tags:    

Similar News