கிரிக்கெட் (Cricket)

சச்சினை தொடர்ந்து சுனில் கவாஸ்கருக்கும் வான்கடே மைதானத்தில் ஆளுயர சிலை

Published On 2025-08-24 02:44 IST   |   Update On 2025-08-24 02:44:00 IST
  • சுனில் கவாஸ்கர் 10,000 டெஸ்ட் ரன்களை எடுத்த முதல் வீரர்.
  • அதிக டெஸ்ட் சதங்கள் (34) அடித்த வீரர் போன்ற பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார்.

மும்பை:

வான்கடே மைதானத்தில் மும்பை கிரிக்கெட்டிற்கு பெருமை சேர்த்த ஜாம்வான்களை கவுரவிக்கும் வகையில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்றும், அது ஆகஸ்ட் மாதம் திறக்கப்படும் எனவும் மும்பை கிரிக்கெட் சங்கம் தெரிவித்திருந்தது. இதற்கு ஷரத்பவார் அருங்காட்சியகம் என பெயரிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், வான்கடே மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள சரத்பவார் அருங்காட்சியகம் நேற்று திறந்துவைக்கப்பட்டது. இதன்

நுழைவாயிலில் இந்திய பேட்ஸ்மேன் சுனில் கவாஸ்கரின் ஆளுயர சிலையை சரத்பவார் மற்றும் கவாஸ்கர் ஆகியோர் திறந்து வைத்தனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சுனில் கவாஸ்கர் 1971 முதல் 1987-ம் ஆண்டு வரை இந்தியா மற்றும் மும்பை அணிகளுக்காக விளையாடியவர்.

10,000 டெஸ்ட் ரன்களை எடுத்த முதல் வீரர், அதிக டெஸ்ட் சதங்கள் (34) அடித்த வீரர் போன்ற பல்வேறு சாதனைகளை அவர் படைத்துள்ளார். தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராக உள்ளார்.

ஏற்கனவே வான்கடே மைதானத்தில் சச்சின் டெண்டுல்கருக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News