கிரிக்கெட் (Cricket)
ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசை: ஸ்மிரிதி மந்தனா 3ஆவது இடத்திற்கு முன்னேற்றம்
- 771 புள்ளிகளுடன் 3ஆவது இடத்திற்கு முன்னேற்றம்.
- ஆஸ்திரேலிய வீராங்கனை பெத் மூனி முதல் இடத்தில் நீடிக்கிறார்.
இந்திய அணியின் துணைக் கேப்டன் ஸ்மிரிதி மந்தனா, ஐசிசி-யின் டி20 பேட்டர்ஸ் தரவரிசையில் 3ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிராக 62 பந்தில் 112 ரன்கள் விளாசி, இந்தியா 97 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற காரணமாக இருந்தார். இதன்மூலம் 771 புள்ளிகள் பெற்று 3ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஆஸ்திரேலியாவின் பெத் மூனி 794 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். வெஸ்ட் இண்டீசின் ஹேலே மேத்யூஸ் 774 புள்ளிகளுடன் 2ஆவது இடத்தில் உள்ளது.
ஷபாலி வர்மா 13ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ள நிலையில், ஹர்லீன் தியோல் 86ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
ஸ்மிரிதி மந்தனா ஒருநாள் போட்டிக்கான பேட்டிங் வரிசையில் நம்பர் ஒன் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.