VIDEO: திருமணத்திற்கு முந்தைய சங்கீத் நிகழ்ச்சியில் நடனமாடிய ஸ்மிருதி மந்தனா
- 29 வயதான ஸ்மிருதி மந்தனா தனது வாழ்க்கையில் 2-வது இன்னிங்சை விரைவில் தொடங்குகிறார்.
- ஸ்மிருதி மந்தனாவின் திருமணத்துக்கு முந்தைய நிகழ்ச்சிகள் நேற்றே தொடங்கின.
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா சமீபத்தில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். இதில் 9 ஆட்டத்தில் ஆடிய மந்தனா ஒரு சதம், 2 அரைசதம் உள்பட 434 ரன்கள் குவித்தார்.
மகாராஷ்டிரத்தை சேர்ந்த 29 வயதான ஸ்மிருதி மந்தனா தனது வாழ்க்கையில் 2-வது இன்னிங்சை விரைவில் தொடங்குகிறார். அவரும் பிரபல இந்தி சினிமா இசையமைப்பாளரான பலாஷ் முச்சாலும் நீண்ட காலமாக காதலித்து வருகிறார்கள். அவருடன் மோதிரம் மாற்றி நிச்சயதார்த்தம் நடந்திருப்பதை உறுதிப்படுத்திய மந்தனா நாளை (23-ந்தேதி) அவரை கரம் பிடிக்கிறார். இவர்களது திருமணத்துக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி இரு வீட்டாருக்கும் வாழ்த்து கடிதம் அனுப்பினார்.
இன்று திருமணம் நடக்க உள்ள நிலையில் ஸ்மிருதி மந்தனாவின் திருமணத்துக்கு முந்தைய நிகழ்ச்சிகள் நேற்றே தொடங்கின.
இந்நிலையில், திருமணத்திற்கு முந்தைய சங்கீத் நிகழ்ச்சியில் ஸ்மிருதி மந்தனா - பலாஷ் முச்சால் ஆகியோர் நடனமாடினர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.