கிரிக்கெட் (Cricket)

பிசிசிஐ-யின் CoE-ல் ரோகித் சர்மா, பும்ரா, கில்: உடற்தகுதியை நிரூபிக்கிறார்கள்..!

Published On 2025-08-30 17:59 IST   |   Update On 2025-08-30 17:59:00 IST
  • பும்ரா சுப்மன் கில் ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ளனர்.
  • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்காக ரோகித் சர்மா ஆயத்தமாகி வருகிறார்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 9ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் முடிவடைந்த பிறகு, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்தியா விளையாட இருக்கிறது.

ஆசிய கோப்பை தொடரில் பும்ரா, சுப்மன் கில் விளையாட உள்ளனர். ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா செயல்பட உள்ளார். இந்த நிலையில் பெங்களூருவில் உள்ள பிசிசிஐ-யின் சிறப்பு மையத்திற்கு (Centre of Excellence) ரோகித் சர்மா, சுப்மன் கில், பும்ரா, ஷர்துல் தாகூர் வந்துள்ளனர். இவர்கள் தங்களுடைய உடற்தகுதியை நிரூபிக்க உள்ளனர்.

ஒரு குறிப்பிட்ட காலம் விளையாடமல் இருந்து அல்லது காயத்தில் இருந்து மீண்டு வந்து, அணிக்கு திரும்பும்போது உடற்தகுதியை நிரூபிக்க வேண்டும். தற்போது பந்து வீச்சாளர்களுக்கான உடற்தகுதியில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

ரோகித் சர்மா ஆஸ்திரேலியா தொடருக்கு முன்னதாக மூன்று போட்டிகளில் விளையாட உள்ளார்.

Tags:    

Similar News