கிரிக்கெட் (Cricket)

கேப்டன் ரிஷப் பண்ட்... SA-க்கு எதிரான ஒருநாள் தொடரில் சீனியர் வீரர்களுக்கு வாய்ப்பு

Published On 2025-11-20 11:48 IST   |   Update On 2025-11-20 11:48:00 IST
  • கொல்கத்தாவில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் சுப்மன் கில் காயமடைந்தார்.
  • இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் வருகிற 30-ந் தேதி தொடங்குகிறது.

தென் ஆப்பிரிக்கா அணி மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

இதில் முதலில் நடந்து வரும் டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி ஒரு வெற்றியுடன் முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கு இடையேயான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 22-ந் தேதி தொடங்க உள்ளது.

இந்நிலையில் காயம் காரணமாக 2-வது டெஸ்டில் இருந்து கில் விலகி உள்ளார். இதனால் ரிஷப் பண்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த தொடர் முடிந்தவுடன் இரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் வருகிற 30-ந் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய அணியில் பல மாற்றங்கள் இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கில்லுக்கு ஏற்பட்ட காயம் சரியாகி வருவதாக மருத்துவர்கள் கூறினாலும் அவருக்கு ஓய்வு கொடுக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த தொடரில் சீனியர் வீரர்களான ரோகித், கோலி இடம் பெற மாட்டார்கள் என கூறி வந்த நிலையில் அவர்கள் இந்த தொடரில் இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

Similar News