கிரிக்கெட் (Cricket)
null

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி - Boycott சர்ச்சையால் கலக்கத்தில் இந்திய அணி வீரர்கள்

Published On 2025-09-14 11:48 IST   |   Update On 2025-09-14 12:00:00 IST
  • இன்று துபாயில் நடக்கும் 6-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
  • பாகிஸ்தானுடன் இந்தியா கிரிக்கெட் விளையாடுவதற்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது

17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது.

போட்டியின் 6-வது நாளான இன்று துபாயில் நடக்கும் 6-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

பாகிஸ்தானுக்கு எதிராக கடைசியாக மோதிய 16 சர்வதேச போட்டிகளை (வெள்ளை நிற பந்து) எடுத்துக் கொண்டால், அதில் இந்தியாவின் ஆதிக்கமே மேலோங்கி நிற்கிறது. இதில் 13-ல் இந்தியாவும், 3-ல் பாகிஸ்தானும் வென்றுள்ளன.

பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் உறவில் விரிசல் விழுந்தது. இதனால் பாகிஸ்தானுடன் இந்தியா கிரிக்கெட் விளையாடுவதற்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

பாகிஸ்தான் உடனான போட்டியை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று இணையத்தில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இணையத்தில் பரவும் செய்திகள் இந்திய வீரர்களை கலக்கமடைய செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால்இந்த சூழ்நிலையை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து ட்ரெஸ்ஸிங் ரூமில் வீரர்களிடையே தலைமை பயிற்சியாளர் கம்பீரிடம் வீரர்கள் ஆலோசனை கேட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வெளியில் நடக்கும் விஷயங்களுக்கு கவனம் கொடுக்காமல் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் மட்டுமே வீரர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று காம்பீர் கூறியதாக அணியின் பீல்டிங் பயிற்சியாளர் ரியான் டென் டொஸ்சாட் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட வேண்டுமா அல்லது புறக்கணிக்க வேண்டுமா என்பது மிகவும் கவனமாக கையாளப்பட வேண்டிய விஷயம். மக்களின் உணர்வுகளை வீரர்கள் அறிவார்கள். இது தொடர்பாக அணி நிர்வாகத்தின் ஆலோசனைக் கூட்டங்களில் பேசினோம். வீரர்கள் கிரிக்கெட் விளையாடுவதற்காக இங்கு வந்துள்ளனர். நாங்கள் அரசாங்கத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்றுகிறோம்.

அரசியல் வேறு விளை யாட்டு வேறு. இந்த விஷயத்தில் மற்றவர்களின் உணர்வுகளை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் நாங்கள் பி.சி.சி.ஐ. மற்றும் அரசாங்கத்தின் வழிகாட்டுதல்களையே பின்பற்றுகிறோம். காம்பீர் வீரர்களுக்கு கொடுத்த அறிவுரை இது தான். உங்களது கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்களில் கவனம் செலுத்தாதீர்கள். கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.

இவ்வாறு டென் டொஸ்சாட் கூறினார்.

Tags:    

Similar News