கிரிக்கெட் (Cricket)

என்னை என்னனாலும் பண்ணுங்க அந்தக் குழந்தையை விட்டுடுங்க- ராணாவுக்கு கம்பீர் ஆதரவு

Published On 2025-10-14 14:15 IST   |   Update On 2025-10-14 14:15:00 IST
  • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள், டி20 தொடரில் ஹர்ஷித் ராணா இடம் பிடித்துள்ளார்.
  • உங்கள் யூடியூப் சேனலில் கூடுதல் VIEWS வேண்டும் என்பதற்காக கண்டதை பேசாதீர்கள்.

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த தொடருக்கான ஒருநாள் மற்றும் டி20 அணி அறிவிக்கப்பட்டது. இந்த 2 அணியிலும் ஹர்ஷித் ராணா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சமீபத்தில் ஆசிய கோப்பை 2025 தொடரில் மோசமான பந்து வீச்சை வெளிப்படுத்திய போதிலும் (54 ரன்கள் கொடுத்து விக்கெட்டுகள் இல்லை) அவர் இரண்டு அணியிலும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தத் தேர்வு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் வேண்டுமென்றால் என்னை விமர்சியுங்கள் என்றும் அந்தக் குழந்தையை விட்டுவிடுங்கள் என்றும் ஹர்ஷித் ராணாவின் கூறியுள்ளார்.

உங்கள் யூடியூப் சேனலில் கூடுதல் VIEWS வேண்டும் என்பதற்காக கண்டதை பேசாதீர்கள். வேண்டுமென்றால் என்னை விமர்சியுங்கள். நான் அதைத் தாங்கிக் கொள்வேன். அந்தக் குழந்தையை விட்டுவிடுங்கள்.

இது கொஞ்சம் வெட்கக்கேடான விஷயம்தான். நான் உங்ககிட்ட ரொம்ப நேர்மையா சொல்றேன். உங்க யூடியூப் சேனலுக்காக ஒரு 23 வயது பையனை குறிவைக்கிறீங்கன்னு சொல்றது ரொம்ப நியாயம் இல்ல. ஏன்னா, அவங்க அப்பா முன்னாள் தலைவரோ, முன்னாள் கிரிக்கெட் வீரரோ, வெளிநாட்டுல பிறந்த இந்தியரோ இல்ல.

இதுவரைக்கும் அவர் எந்த கிரிக்கெட் விளையாடியிருந்தாலும், அவரு தனியா விளையாடியிருக்காரு, தொடர்ந்து தனியா விளையாடுவாங்க. நீங்க யாரையாவது தனியா குறிவைச்சீங்கன்னா, அது நியாயமில்லை.

என கம்பீர் கூறினார்.

Tags:    

Similar News