நான் வெளியில் இருப்பது விசயம் அல்ல: வெற்றி குறித்து ரபாடா கருத்து
- யார் வெளியில் இருக்கிறார்கள் என்பது விசயம் இல்லை.
- எங்களால் இன்னும் வெற்றிக்கான வழியை கண்டுபிடிக்க முடியும்.
இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. காயம் காரணமாக தென்ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் ரபாடா கடைசி நேரத்தில் அணியில் இருந்து விலகினார். என்றாலும் யான்சன் வேகப்பந்து வீச்சில் அசத்தினார். ரபாடாவுக்கு பதிலா களம் இறங்கிய போஸ்ச் 2ஆவது இன்னிங்சில் பவுமா உடன் பார்ட்னர்ஷிப் அமைத்தார். சுழற்பந்து வீச்சாளர் ஹார்மர் இரண்டு இன்னிங்சிலும் தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்த தென்ஆப்பிரிக்கா 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய மண்ணில் 15 வருடங்களுக்கு மேல் தென்ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் யார் வெளியே இருக்கிறார்கள் என்பது முக்கியமான விசயம் அல்ல எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ரபாடா கூறியதாவது:-
யார் வெளியில் இருக்கிறார்கள் என்பது விசயம் இல்லை. எங்களால் இன்னும் வெற்றிக்கான வழியை கண்டுபிடிக்க முடியும். கேப்டன் பவுமா எங்களுக்கு முக்கியமானவர். ஆனால், அவர் எல்லா போட்டிகளிலும் விளையாடுவதில்லை. நான் கொல்கத்தா போட்டியில் விளையாடவில்லை.
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் பவுமா விளையாடவில்லை. அதில் தென்ஆப்பிரிக்கா 1-1 என தொடரை சமன் செய்தது. யார் மைதானத்தில் இருந்து வெளியேறினால் அது பெரிய விசயம் அல்ல. உள்ளே உள்ள மற்ற வீரர்களால் பணியை சிறப்பாக செய்ய முடியும் என நாங்கள் நம்புகிறோம்.
இவ்வாறு ரபாடா தெரிவித்தார்.