கிரிக்கெட் (Cricket)

இந்தியாவை எதிர்கொள்ளும்போது சாதகம் எனச் சொல்வதற்கு ஏதும் கிடையாது: ஜோ ரூட் சொல்கிறார்

Published On 2025-03-29 17:26 IST   |   Update On 2025-03-29 17:26:00 IST
  • இந்தியா இங்கிலாந்து சென்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
  • ஜூன் 20ஆம் தேதி இந்த தொடர் தொடங்குகிறது.

2025-2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் முதல் டெஸ்ட் தொடரை இங்கிலாந்து இந்தியாவுக்கு எதிராக தொடங்குகிறது. இந்திய அணி வருகிற ஜூன் மாதம் முதல் ஜூலை மாதம் வரை இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது.

இந்த தொடர் குறித்து ஜோ ரூட் கூறியதாவது:-

எங்களுடைய சொந்த மண்ணில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளோம். ஆனால், இந்தியா போன்ற அணி ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட வரும்போது அப்படி சொல்வதற்கு ஏதும் இல்லை. இது நீண்ட் நாட்கள் கொண்ட தொடர். தொடர்ந்து நிலையான பார்ஃம் பெற்றிருப்பது அவசியம். நேரத்திற்கு நேரம் மீண்டும் மீண்டும் போட்டி வெற்றிக்கான செயல்பாட்டை கொடுக்க வேண்டும்.

இவ்வாறு ஜோ ரூட் தெரிவித்தார்.

ஜோ ரூட் இங்கிலாந்தின் தலைசிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேனாக திகழ்ந்து வருகிறார். கடந்த வரும் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பட்டியலில் குக்கை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்துள்ளார்.

இவரது தலைமையில் இங்கலாந்து அணி 2017 முதல் 2022 வரை 64 போட்டிகளில் 27 போட்டிகளில் வெற்றி பெற்றது. 2021 அவருக்கு கடினமானதாக இருந்தது, 17 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியாவில் ஆஷஸ் தொடரை இழந்தது. இதனால் கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டிய நிலை ஏற்பட்டது.

Tags:    

Similar News