கிரிக்கெட் (Cricket)

'கேப்டன் கூல்' வாசகத்தை 'TRADEMARK' ஆக பதிவு செய்கிறார் தோனி

Published On 2025-06-30 17:45 IST   |   Update On 2025-06-30 17:45:00 IST
  • "கேப்டன் கூல்" வாசகத்தை டிரேட்மார்க் (Trademark) ஆக பதிவு செய்ய தோனி விண்ணப்பித்துள்ளார்.
  • தோனி ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடி வருகிறார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. இவர் இந்திய அணிக்காக 3 கோப்பைக்களை வென்ற கொடுத்த கேப்டன் ஆவார். சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்த இவர் ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடி வருகிறார்.

இந்நிலையில் கிரிக்கெட் ரசிகர்கள் அன்பாக அழைக்கும் "கேப்டன் கூல்" வாசகத்தை டிரேட்மார்க் (Trademark) ஆக பதிவு செய்ய தோனி விண்ணப்பித்துள்ளார். இந்த விண்ணப்பம் ஜூன் 5, 2023 அன்று இந்திய டிரேட்மார்க் ரிஜிஸ்ட்ரி மூலம் ஆன்லைனில் தாக்கல் செய்யப்பட்டது.

"கேப்டன் கூல்" என்ற பெயர் 2007 டி20 உலகக் கோப்பை, 2011 ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் 2013 சாம்பியன்ஸ் டிராபி வெற்றிகளின் போது பிரபலமானது.

இந்த டிரேட்மார்க் மூலம், தோனி தனது பிராண்ட் அடையாளத்தை பாதுகாக்கவும், வணிக வாய்ப்புகளை விரிவாக்கவும், குறிப்பாக விளையாட்டு பயிற்சி, ஆடை, மற்றும் டிஜிட்டல் துறைகளில் தனது பெயரைப் பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளார்.

இந்த டிரேட்மார்க்கிற்கு 2021-ல் பிரபா ஸ்கில் ஸ்போர்ட்ஸ் (Prabha Skill Sports) என்ற நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்தது. இதே பெயரை அந்த நிறுவனம் பதிவு செய்ய முயன்றது. ஆனால், தோனியின் புகழ், ஊடக கவரேஜ் மற்றும் ரசிகர்களின் அங்கீகாரம் காரணமாக, இந்தப் பெயர் தோனியுடன் மட்டுமே தொடர்புடையது என டிரேட்மார்க் ரிஜிஸ்ட்ரி ஏற்றுக்கொண்டது.

இதன் மூலம் தோனியின் அனுமதி இல்லாமல் வேறு எந்த நிறுவனமும் வணிக நோக்கத்திற்காக இந்த வாசகத்தை பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News