கிரிக்கெட் (Cricket)

டிராவிஸ் ஹெட் உடன் மோதல்: முகமது சிராஜிக்கு 20 சதவீதம் அபராதம்

Published On 2024-12-09 20:10 IST   |   Update On 2024-12-09 20:10:00 IST
  • அடிலெய்டு டெஸ்டில் டிராவிஸ் ஹெட் 140 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
  • அப்போது முகமது சிராஜ் வெளியே போ... என்ற வகையில் சைகை காட்டுவார்.

இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடைபெற்றது. இதில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதற்கு முக்கிய காரணம் டிராவிஸ் ஹெட் முதல் இன்னிங்சில் 140 ரன்கள் குவித்ததுதான்.

அவர் இந்திய பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்து 141 பந்தில் 17 பவுண்டரி, 4 சிக்சருடன் 140 ரன்கள் விளாசினார். டிராவிஸ் ஹெட் முகமது சிராஜ் பந்தில் க்ளீன் போல்டானார். அப்போது டிராவிஸ் ஹெட்டை பார்த்து முகமது சிராஜ் முறைப்பார். அதற்கு டிராவிஸ் ஹெட் ஏதோ கூறுவார். இதனால் முகமது சிராஜ் வெளியே போ... வெளியே போ.. என சைகை காட்டுவார்.

இருவரும் மைதானத்தில் மோதிக்கொண்டது ரசிகர்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியது. வார்த்தைபோர், ஸ்லெட்ஜிங்கை தாண்டி முகம் சுழிக்க வைத்தது.

இந்த விவகாரம் குறித்து ஐசிசி நடுவர்கள் விசாரணை நடத்தினர். அப்போது இருவரும் தங்களது குற்றத்தை ஒப்புக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து முகமது சிராஜிக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 20 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இருவருக்கும் தலா ஒரு தகுதி இழப்பு புள்ளிகள் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News